அடுத்த செய்திக் கட்டுரை

இன்ஸ்டாகிராமில் இட்லியை சுற்றி நடைபெறும் விவாதம்: 'சுவையற்ற வெள்ளை பஞ்சு' என்று குறிப்பிட்டதால் வந்த வினை
எழுதியவர்
Venkatalakshmi V
Mar 10, 2023
07:23 pm
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில், உணவு என்பது, ஒருவரின் உணர்வோடு தொடர்புடையது. அதனால்தான், அவ்வப்போது, பிராந்திய உணவு விவாதங்கள் இணையத்தில் சூடு பிடிக்கின்றன. சமீபத்தில் கூட எந்த பிரியாணி சிறந்தது என்று ஒரு விவாதம் ட்விட்டரில் வைரலானது.
தற்போது, அந்த இடத்தை நிரப்பியுள்ளது, தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவாக கருதப்படும் இட்லி.
ஸ்டாண்ட்-அப் காமெடியன் கோவிந்த் மேனன் என்பவர், இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பதிவிட்ட வீடியோ தான், இந்த விவாதத்திற்கு தொடக்கப்புள்ளி.
அந்த வீடியோவில், மேனன், இட்லி ஒரு சாதுவான, சுவையற்ற வெள்ளை பஞ்சு போன்ற உணவு. தனக்கென்று எவ்வித சுவையோ, குணாதிசயமோ இல்லாதது என்று கூறுகிறார்.
தொடர்ந்து அவர், இட்லியை விட, அதனுடன் இருக்கும் சாம்பார் தான் ருசியாகவும், அனைத்து உணவுகளுக்கும் பொருத்தமாக இருக்கிறது என்றும் கூறுகிறார்.