காதலர் தின ஸ்பெஷல்: தங்கள் துணைகளை அழகாக படம் பிடித்து பகிர்ந்த புகைப்படக் கலைஞர்கள்
புகைப்பட கலைஞர்களின் காதலை எவ்வாறு வெளிப்படுத்துவார்கள் என்று யோசித்ததுண்டா? தங்களின் லென்ஸ் மூலமாக தங்கள் கூட்டாளிகளை அழகாக காண்பிப்பதன் மூலம் திரைப்பட புகைப்படக் கலைஞர் இசபெல் பால்ட்வின், பிரபல புகைப்படக் கலைஞர்களின் நீண்ட பட்டியலைப் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களின் அழகு என்னவென்றால், இதில் விலையுயர்ந்த செட்கள், கவர்ச்சியான ஒப்பனை இல்லை. ஆனால் அழகான போட்ரைட் வடிவில், காதலை வெளிப்படுத்துவது போல உள்ளது இதன் அழகு. சிலர் இந்த ட்விட்டர் த்ரெட்டில், தங்கள் துணையாக அவர்கள் நினைக்கும் செல்ல பிராணிகள் படத்தையும் பகிர்ந்துள்ளனர்.