Page Loader
நீண்ட ஆயுளுக்கான 'ரகசியத்தை' வெளிப்படுத்திய 108 வயது லண்டன் பாட்டி
'பார்ட்டி' செய்யும் 108 வயது லண்டன் பாட்டி

நீண்ட ஆயுளுக்கான 'ரகசியத்தை' வெளிப்படுத்திய 108 வயது லண்டன் பாட்டி

எழுதியவர் Venkatalakshmi V
Mar 23, 2023
11:01 am

செய்தி முன்னோட்டம்

தென்கிழக்கு லண்டனில் உள்ள ஓர்பிங்டனைச் சேர்ந்த 108 வயதான மேரி ஆன் கிளிஃப்டன் என்ற மூதாட்டி, நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தை தற்போது கூறியுள்ளார். ரோசினா என்று செல்லமாக அழைக்கப்படும் அந்த பாட்டி,"எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மனதிற்கு பிடித்ததை செய்யுங்கள். தினமும் மதிய உணவிற்கு பிறகு சிறிது வைன் பருகுகிறேன். அது எனக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் அதைவிட கடினமாக கொண்டாட்டமாக இருக்க வேண்டும் - சிறிதளவு கடின உழைப்பு உங்களை காயப்படுத்தாது" என்று தெரிவித்ததாக ஊடக செய்திகள் கூறுகின்றன. மார்ச் 16, 1915 இல், ரோசினாவுக்கு நான்கு பேரக்குழந்தைகள், 10 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் ஏழு எள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

மேயர் கலந்துகொண்ட பாட்டிமாவின் பிறந்தநாள்