NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / 'தாய் கறி' போலவே உலக அளவில் பிரபலமாக இருக்கும் குழம்பு வகைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'தாய் கறி' போலவே உலக அளவில் பிரபலமாக இருக்கும் குழம்பு வகைகள்
    தாய்லாந்தின் பாரம்பரியமான க்ரீன் கறி

    'தாய் கறி' போலவே உலக அளவில் பிரபலமாக இருக்கும் குழம்பு வகைகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 30, 2023
    06:28 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆங்கிலத்தில் 'curry ' என்ற வார்த்தை தமிழில் இருந்து தான் வந்தது என உங்களுக்கு தெரியுமா?

    'கறி' என்றால் மரக்கறி என்றும், மாமிசம் என்றும் பொருள் தரும்.

    அதோடு கறி என்பதற்கு உண்பது எனவும் பொருள்படும் என சிலர் கூறுகிறார்கள்.

    அதுதான் பின்னர் ஆங்கில வார்த்தையாக, உலகம் முழுவதும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த வரலாற்று குறிப்போடு, உலக அளவில் பிரபலமாக உள்ள குழம்பு வகைகள் என்னென்ன என்பதையும் தற்போது தெரிந்துகொள்ளலாம்.

    card 2

    பன்னீர் பட்டர் மசாலாவும், குருமாவும் 

    தக்காளி,வெங்காயம் மற்றும் மசாலாக்கள் சேர்த்து அரைத்த குழம்பில், பன்னீர் துண்டுகள் சேர்த்து செய்யப்படும் பிரபலமான இந்த கிரேவி வகை, சப்பாத்தி, நாண் போன்றவற்றிற்கு மட்டுமல்லாமல் ஜீரா ரைஸ், புலாவ் போன்றவற்றோடும் சேர்த்து உண்ணலாம்.

    இந்தியாவின் பிரபலமான உணவாக வேர்ல்ட் அட்லாஸ் என்ற நிறுவனமும் இந்த கிரேவியை பரிந்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    குருமா அல்லது இஷ்ட்டு என்பதும் கேரளாவின் பாரம்பரிய உணவே. காய்கறிகளை, குறிப்பாக பீன்ஸ், கேரட், காலிஃபிளவர் மற்றும் உருளை கிழங்கு போன்றவற்றை, தேங்காய் பாலில் வேகவைத்து, அதனுடன், சோம்பு, ஏலக்காய் போன்ற மசாலா பொருட்களை அரைத்து கொதிக்கவிடவும். சுவையான இந்த குருமா, பரோட்டா, இடியாப்பத்திற்கு சூப்பர் சைடு டிஷ்.

    card 3

    சாம்பார்

    இந்த வகை உணவானது, தென்னிந்தியா மாநிலங்களில் மிகவும் பிரபலம்.

    இதிலேயே பல வகைகள் உண்டு. சாதத்தில் பிசைந்து உண்ணவும், இட்லி, தோசை, பொங்கல் போன்ற உணவிற்கு சைடு டிஷாகவும் இந்த குழம்பு பலராலும் விரும்பப்படுகிறது.

    சாம்பார் பற்றிய குறிப்பு 17 ஆம் நூற்றாண்டிலேயே இருந்ததாக உணவு ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    கி.பி. 1530 நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு நூலில், சம்பாரம் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும், அது தற்போதுள்ள சாம்பாரை தான் குறிக்கிறது என அவர்கள் கூறுகிறார்கள்.

    பருவகால காய்கறிகள் கொண்டு செய்யப்படும் உணவை வெளிநாட்டவர்களும் ரசிப்பது நமக்கு பெருமை.

    card 4

    கரே

    கரே என அழைக்கப்படும் ஜப்பானிய பாணி கறி, ஜப்பானில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும்.

    இது, ஜப்பானில் மீஜி காலத்தில் (1868-1912) ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என கூறுகிறார்கள்.

    இந்த உணவு, ஆரம்பத்தில், பணக்காரர்கள் மட்டுமே உண்ணக்கூடிய ஒரு உணவாக கருதப்பட்டது.

    இந்திய கறிகளுடன் ஒப்பிடும்போது, காரே குறைவான காரம் கொண்டிருக்கும். இதில் மூன்று வகைகள் உண்டு- கரே ரைசு (அரிசி கறி), கரே உடோன் (நூடுல்ஸ் கறி), மற்றும் கரே -பான் (கறி நிரப்பப்பட்ட பேஸ்ட்ரி).

    card 5

    தாய் கறி/ க்ரீன் கறி

    தாய்லாந்தின் பாரம்பரியமான க்ரீன் கறி, அதன் நிறத்தின் காரணமாக அழைக்கப்படுகிறது. மசாலா, இனிப்பு, புளிப்பு மற்றும் உப்பு ஆகியவற்றோடு, காரமான பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து, பாரம்பரிய காய்கறிகள் அதனுடன் சேர்க்கப்பட்டு செய்யப்படுவது இந்த கறி.

    பாரம்பரியமாக தயாரிக்கப்படும் தாய் கறியில், எலுமிச்சை மற்றும் காஃபிர் சுண்ணாம்பு மற்றும் காரமான பூண்டு மற்றும் வெங்காயத்தின் ருசி தூக்கலாக இருக்கும்.

    இந்த குழம்பு வகை, தாய் ரைஸ் எனப்படும் அரிசியுடன் பரிமாறப்படும்.

    card 6

    பன்னி சோவ் 

    தென்னாப்பிரிக்காவின் பன்னி சோவ் படைப்பாற்றல் மற்றும் சுவைக்காக பிரபலமானது.

    அட்லஸ் அப்ஸ்குராவின் கூற்றுப்படி, பன்னி சோவ், ரொட்டியின் ஒரு முனையில், ஒரு கிண்ணத்தை போல தோண்டி எடுக்கப்பட்டு, அதில் உள்நாட்டில் கிடைக்க கூடிய மசாலா கலவைகளை ஊற்றி தரப்படும்.

    அந்த கலவை, ரொட்டி துண்டில், நன்றாக ஊறி, ஒரு தனி சுவையை தருகிறது. இதில் உங்கள் தேவைக்கேற்ப, சைவமோ, அசைவமோ கலந்து பரிமாறலாம்.

    நீங்கள் கேப்டவுன், டர்பன் அல்லது ஜோகன்னஸ்பர்க் தெருக்களில் பயணம் செய்யும்போது, இந்த உணவை முயற்சிக்கும் வாய்ப்பை நீங்கள் இழக்கக்கூடாது.

    காரணம் அங்கே தெருவுக்கு தெரு இந்த உணவு விற்கப்படுமாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உணவு பிரியர்கள்
    தேசிய ஊட்டச்சத்து வாரம்

    சமீபத்திய

    மஹிந்திரா BE 6 ரியர் வியூ கண்ணாடி விலை மட்டும் இவ்ளோவா? இதுக்கு ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கே வாங்கிடலாமே! மஹிந்திரா
    உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி கனிமொழி
    அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை விதித்து NOTAM அறிவிப்பு அந்தமான் நிக்கோபார்
    தாங்கள் உருவாக்கிய அதே AI அமைப்புகளால் பணிநீக்கம் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் பொறியாளர்கள் மைக்ரோசாஃப்ட்

    உணவு பிரியர்கள்

    இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: குஜராத் பதிப்பு அகமதாபாத்
    'நெட்ஃபிலிக்ஸ்' நிறுவனம் தொடங்கியிருக்கும் புதிய உணவகத்தில் என்ன ஸ்பெஷல்? நெட்ஃபிலிக்ஸ்
    உலகின் சிறந்த உணவகங்களின் பட்டியலில் இடம்பெற்ற 7 இந்திய உணவகங்கள் கேரளா
    2 நிமிட நூடுல்ஸ் கேள்விப்பட்டு இருப்பீர்கள், ஆனால் பொறித்த நூடுல்ஸ் தெரியுமா? உணவு குறிப்புகள்

    தேசிய ஊட்டச்சத்து வாரம்

    தேசிய ஊட்டச்சத்து வாரத்தை 'Glance ஃபுட் ஃபேருடன்' கொண்டாடுங்கள்  உணவு குறிப்புகள்
    உணவுக் கட்டுப்பாடு, உடல் எடையைப் பராமரிக்க உதவும் முக்கியக் காரணி ஊட்டச்சத்து
    காலை உணவு என்பது ஏன் மிக முக்கியமானது? ஆரோக்கியம்
    டீடாக்ஸ் டயட், ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சிறந்த உணவுமுறைப் பழக்கமா? டயட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025