LOADING...
ஜிம்முக்கு போக நேரமில்லையா? வெறும் 15 நிமிடம் ஓடுங்க போதும்! நீண்ட ஆயுளுக்கான எளிய ரகசியம் இதோ
தினமும் 15 நிமிடம் ஓடுவதால் கிடைக்கும் வியக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகள்

ஜிம்முக்கு போக நேரமில்லையா? வெறும் 15 நிமிடம் ஓடுங்க போதும்! நீண்ட ஆயுளுக்கான எளிய ரகசியம் இதோ

எழுதியவர் Sekar Chinnappan
Jan 10, 2026
01:00 pm

செய்தி முன்னோட்டம்

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று கூறுபவர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. புதிய ஆய்வுகளின்படி, ஒரு நபர் தினமும் வெறும் 15 நிமிடங்கள் மட்டும் ஓடுவது, நீண்ட கால அடிப்படையில் மிகப்பெரிய ஆரோக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிக நேரம் செலவழிக்காமல் இதய ஆரோக்கியத்தையும், மன நலத்தையும் மேம்படுத்த இது ஒரு மிகச்சிறந்த வழியாகும். தினமும் 15 நிமிடம் ஓடுவது இதய நோய்களால் ஏற்படும் மரண அபாயத்தை சுமார் 30% குறைப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைத்து இதயத் துடிப்பைச் சீராக்குகிறது.

ஆயுட்காலம்

ஆயுட்காலம் அதிகரிப்பு

வாரத்திற்கு ஒட்டுமொத்தமாக 75 நிமிடம் தீவிர உடற்பயிற்சி செய்வது ஒருவரின் ஆயுட்காலத்தை பல ஆண்டுகள் அதிகரிக்க உதவும் என்று மருத்துவக் குழுக்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஓடுவது உடல் ரீதியான நன்மைகளைத் தருவதோடு மட்டுமல்லாமல், மன நலத்திற்கும் மருந்தாக அமைகிறது. ஓடும்போது உடலில் எண்டோர்பின்கள் எனப்படும் மகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. இது மன அழுத்தம், பதற்றம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளுக்குச் சிறந்த தீர்வாக அமைகிறது. வெறும் 15 நிமிட ஓட்டம் உங்கள் மூளையைத் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.

அறிவுரை

நிபுணர்களின் அறிவுரை

தொடக்கத்தில் ஓட ஆரம்பிப்பவர்கள் மெதுவாகத் தொடங்கி, படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். முறையான காலணிகளை அணிவது மற்றும் ஓடுவதற்கு முன்பாக வார்ம்-அப் செய்வது காயங்களைத் தவிர்க்க உதவும். ஜிம்மிற்குச் சென்று பல மணிநேரம் செலவழிக்க முடியாதவர்கள், இந்த 15 நிமிட ஓட்டப் பயிற்சியைத் தங்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்வதன் மூலம் நீண்ட கால ஆரோக்கியத்தைப் பெறலாம்.

Advertisement