புதுச்சேரியில் அரசு பெண் ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைப்பு
செய்தி முன்னோட்டம்
புதுச்சேரியில் உள்ள அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள், வெள்ளிக்கிழமைகளில் பணி நேரம் 2 மணிநேரம் குறைக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அம்மாநில முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இணைந்து கூட்டாக அறிவித்துள்ளார்கள்.
அதன்படி இனி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பதிலாக பெண்கள் 11 மணிக்கு அலுவலகம் செல்லலாம்.
வெள்ளிக்கிழமைகளில் காலை நேரத்தில் வேலை பளு அதிகமாக உள்ளதால் பெண்கள் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
புதுச்சேரி மாநில அரசின் இந்த அறிவிப்பிற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் 12 மணி நேர வேலை மசோதாவினை தமிழக முதல்வர் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN || புதுச்சேரி - பெண்களுக்கு வேலை நேரம் குறைப்பு | #Puducherry | #GovernmentEmployees | #WorkingHours | https://t.co/CKGwVurgWm pic.twitter.com/zgqiYk8Fps
— Polimer News (@polimernews) April 27, 2023