
நிர்மலா சீதாராமனின் மகளுக்கு பிரதமர் மோடியின் ஆலோசகருடன் திருமணம்
செய்தி முன்னோட்டம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வங்கமாயிக்கும் PMO அதிகாரி பிரதிக் தோஷிக்கும் நேற்று பெங்களூரு ஜெயநகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.
எந்த அரசியல் தலைவர்களையும் அழைக்காமல் மிக எளிமையாக நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்து மத சம்பிரதாயத்தின் படி நடத்தப்பட்ட இந்த திருமணத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
இந்த வீடியோவில் மணப்பெண் பரகலா வங்கமாயிக்கு பின்னால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் நின்று கொண்டிருந்தார்.
இந்நிலையில், நிர்மலா சீதாராமனின் மகளை திருமணம் செய்து கொண்டது பிரதமர் அலுவலகத்தில்(PMO) வேலை பார்க்கும் ஒரு உயர் அதிகாரி என்ற தகவல் வெளியாகி உள்ளது.
DETAISL
நிர்மலா சீதாராமனின் மருமகன்: யாரிந்த பிரதிக் தோஷி?
குஜராத்தை பூர்விகமாக கொண்ட பிரதிக் தோஷி, பிரதமர் மோடியின் உயர் ஆலோசகராவார்.
இவர் பிரதமர் அலுவலகத்தில் வேலைக்கு சேர்வதற்கு முன், 'தி இந்து' பத்திரிகையில் எழுத்தாளராக பணிபுரிந்திருக்கிறார்.
பிரதிக் தோஷி ஒரு சிறப்புப் பணி(OSD) அதிகாரி என்றும் அவர் ஆராய்ச்சி மற்றும் மூலோபாய பிரிவில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறார் என்றும் PMO வலைத்தளம் கூறுகிறது.
இந்திய அரசாங்கத்தின்(வணிக ஒதுக்கீடு) விதிகள், 1961இன் படி, பிரதிக் தோஷி, ஆராய்ச்சி மற்றும் உத்தி போன்ற தலைப்புகளில் பிரதமருக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
சிங்கப்பூர் மேனேஜ்மென்ட் ஸ்கூலில் பட்டம் பெற்ற இவர், இதற்கு முன் குஜராத் முதலமைச்சர் அலுவலகத்தில்(CMO) ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றினார்.
அந்த சமயத்தில் தான், பிரதமர் மோடியும் குஜராத் முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.