திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம்
செய்தி முன்னோட்டம்
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகளவில் பிரசித்தி பெற்றது.
இந்த கோயிலில் அமைந்துள்ள தங்கக் கோபுரத்திற்கு பொன் முலாம் பூசப்பட்ட புதிய தகடுகளை மாற்றும் பணி நடைபெறவுள்ளது.
இந்த பணி நிறைவடைய 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறப்பட்ட நிலையில், அந்த பணிகள் முடியும் வரை ஏழுமலையான் கோயில் கருவறை மூடப்பட்டிருக்கும் என்று சில ஊடகங்களில் செய்திகள் பரவியது.
இதற்கு கடுமையான எதிர்ப்பினை திருப்பதி தேவஸ்தான ஏழுமலையான் கோயில் தலைமை அர்ச்சகர்களில் ஒருவரான வேணுகோபால் தீட்சதுலு தெரிவித்து, இது குறித்த விளக்கத்தினை ஓர் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "கோபுரத்திற்கு புதிதாக தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளை மாற்றும் பொழுது பாலாலயம் செய்யப்படும்" என்றும்,
உற்சவருக்கு செய்யும் கட்டண சேவைகளில் மாற்றம் எதுவும் இருக்காது
வேறு ஒரு மூலவரை ஏற்பாடு செய்யும் பணி மேற்கொள்ளப்படும் என்று தகவல்
அப்போது வேறு ஒரு மூலவரை ஏற்பாடும் செய்யும் பணிகள் நடக்கும். முன்னதாக 1957-58ம் ஆண்டில் புதிய தங்க தகடுகள் பொருத்தப்பட்ட பொழுதும், 2018ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்ட பொழுதும் இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "அதே போல் இப்பொழுதும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தற்போது இருக்கும் மூலவரையும், பாலாலயம் செய்யப்பட்டு புதிதாக பிரதிஷ்டை செய்யப்படவுள்ள மூலவரையும் கண்டு வழிபடலாம்.
எனினும், மூலவருக்கு நடக்கும் கட்டண சேவைகள் அனைத்தும் ஏகாந்தமாக நடைபெறும்.
அதே நேரத்தில் உற்சவருக்கு நடத்தும் கல்யாண உற்சவம், கட்டண பிரமோற்சவம் ஆகியவைகளுக்கான கட்டண சேவைகளில் மாற்றம் ஏதும் இல்லை" என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.