"மாணவர்களைத் தூண்டிவிடாதீர்கள்...": நீட் விவகாரத்தில் பிரதமர் மோடி பேச்சு; CJP போராட்டத்திற்கு மத்தியில் NDA எம்பிக்களுக்கு உத்தரவு
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) அமைப்பினர் நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நீட் விவகாரத்தில் அரசின் "இளைஞர்களுக்கு முதலிடம்" எனும் அணுகுமுறையையும், பிரதமர் நரேந்திர மோடியின் உரையின் முக்கிய அம்சங்களையும் எடுத்துரைத்தார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி சுட்டிக்காட்டிய முக்கிய நடவடிக்கைகள்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் வெளிவந்த உடனேயே மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
"வினாத்தாள் கசிவு கும்பலுக்கு நாட்டின் சிறந்த வழக்கறிஞர்களைப் பயன்படுத்தி மிகக் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காதவாறு இது ஓர் முன்மாதிரி நடவடிக்கையாக இருக்க வேண்டும்" என பிரதமர் வலியுறுத்தியதாக ரிஜூஜூ கூறினார்.
பிரதர் மோடி மேலும், "இளைஞர்களைத் தவறான பாதையில் தூண்டிவிடாதீர்கள்; அவர்களுக்குச் சரியான பாதையைக் காட்டுங்கள். தவறான பாதைக்குச் செல்வது எளிது, ஆனால் அவர்களை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டுவருவது கடினம். அதுவே நமது பொறுப்பு." தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கோரிக்கைகள்
CJP அமைப்பின் 3 முக்கியக் கோரிக்கைகள்
முன்னதாக, போராட்டத்தை முன்னெடுத்து வரும் CJP அமைப்பின் பிரதிநிதிகளான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகியோர் அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதில், நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சையால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும்; மத்திய கல்வி அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; மாணவர்களுக்கு ஆதரவாக ஜூன் மாத இறுதியில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் விடுவிக்கப்பட வேண்டும் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், நீட் முறைகேடு விவகாரம் அவைக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.