புதிய ஒளிபரப்பு சேவைகள் சட்டமானது யார் யாருக்கெல்லாம் பொருந்தும்?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் ஒடிடி சேவைகள் மற்றும் ஆன்லைன் ஒளிபரப்பு சேவைகள் ஆகியவற்றுக்கான விதிமுறைகளை அமல்படுத்தும் பொருட்டு புதிய 'ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) சட்டம், 2023'-க்கான வரைவை இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்டத்து தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்.
முன்னர் இருந்த தொலைக்காட்சி வலைப்பின்னல் சட்டத்திற்கு மாற்றாக, அனைத்து விதமான ஒளிபரப்புத் தளங்களுக்கும் சேர்த்த ஒரே சட்டமாக இதனை அமல்படுத்தத் திட்டமிட்டு வருகிறது மத்திய அரசு.
தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் இந்தப் புதிய சட்டமானது, நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் போன்ற ஓடிடி தளங்கள் மட்டுமல்லாது, ஆன்லைன் மற்றும் சமூக வலைத்தளங்களில் தொழில்ரீதியாக செய்தி உள்ளடக்கங்களை வெளியிடுபவர்களும் அடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா
ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) சட்டம், 2023:
ஒரு தனிநபர், செயதி நிறுவனமொன்றில் வேலை பார்த்துக் கொண்டே, தன்னுடைய சமூக வலைத்தளங்களில் செய்திகள் தொடர்பான உள்ளடக்கங்களைப் பதிவிடுகிறார் எனில், அவருடைய சமூக வலைத்தளக் கணக்கும் மேற்கூறிய சட்டத்திற்கு உட்பட்டதாகவே கருதப்படும்.
மேலும், ஒரு தனிநபர் எந்த ஒரு செய்தி நிறுவனத்தையும் சாராமல், அதேநேரம் வணிக ரீதியாக செய்தி உள்ளடக்கங்களை பகிர்ந்து வருகிறார் எனில், அவரும் இந்தப் புதிய சட்டத்தின் கீழே வந்து விடுகிறார்.
தனிநபர்கள் வணிக ரீதியாக அல்லது தொழில் ரீதியாக இல்லாமல், அவ்வப்போது மட்டும் செய்தி தொடர்பான உள்ளடக்கங்களை பதிவிடுகிறார் எனில், அவருக்கு இச்சட்டம் பொருந்தாது.
மேற்கூறிய கணக்குகளின்படி நரேந்திர மோடியின் வாட்ஸ்அப் சேனல் கூட இந்தப் புதிய ஒழுங்குமுறை சட்டத்தின் கீழேயே வருவது குறிப்பிடத்தக்கது