பெங்களூரு பள்ளி அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
பெல்லந்தூர் பிரக்ரியா பள்ளிக்கு எதிரே அமைந்துள்ள நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிப்பொருட்களை பெங்களூரு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த ஆபத்தான கண்டுபிடிப்பு குறித்து சட்ட அமலாக்க அதிகாரிகள் அவசர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெல்லந்தூர் பிரக்ரியா பள்ளிக்கு எதிரே அமைந்துள்ள நிலத்தில் கிடந்த ஒரு பழைய டிராக்டரில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
எனவே, அந்த டிராக்டர் வெடிப்பொருட்களை எடுத்து செல்ல பயனப்டுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஒரு கட்டுமான தளத்தில் பாறைகளை வெடிக்கச் செய்ய வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது மேலும் கவலைகளை அதிகரித்துள்ளன.
பெங்களூர்
பெங்களூரில் வெடிகுண்டு பிரச்சனைகள்
இந்த சம்பவங்கள் தொடர்பாக பெல்லந்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோதமாக வெடிபொருட்கள் சேகரித்தது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1ஆம் தேதி குறைந்த தீவிரம் கொண்ட ஒரு வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டது. இதனால், 10 பேர் காயமடைந்தனர்.
அந்த சம்பவம் நடந்து 3 வாரங்களே ஆகும் நிலையில், தற்போது பெங்களூரில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பரில் பெங்களூரு முழுவதும் 15 பள்ளிகளுக்கு அநாமதேய மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.