அடுத்த செய்திக் கட்டுரை
காண்போரை வியக்க வைத்த மணமகளின் வித்தியாசமான மெஹந்தி!
எழுதியவர்
Siranjeevi
Apr 13, 2023
12:48 pm
செய்தி முன்னோட்டம்
இன்றைய நவீன டிஜிட்டல் உலகம் வேகமாக முன்னேறி வருகிறது. ஸ்மார்ட்போன் கையில் இருந்தால் அனைத்து வேலையும் செய்துவிட முடியும் என்ற நிலை வந்துவிட்டது.
அந்த வகையில், எப்பொழுதும் இணையத்தில் ஏதாவது ஒரு வீடியோ ட்ரெண்டாகி ஆச்சரியப்படுத்தும், அதன்படி இணையத்தில் ஒரு மெஹந்தி வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
அதாவது திஷா தும்கர் என்ற மணமகளுக்கு அங்கிதா ஜாதவ் என்ற மெஹந்தி கலைஞர் வித்தியாசமான முறையில் மெஹந்தியை வரைந்து பார்வையாளர்களை அசத்தியுள்ளார்.
அவர் வரைந்த மெஹந்தியில், மணமகள், மணமகனை சந்தித்த தேதி, காதலை வெளிப்படுத்திய தேதி என வரையப்பட்டுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரல் செய்தியாக 10 லட்சம் லைக்குகளை குவித்திருக்கிறது. பலரும் இதெப்போல் மெஹந்தி வரையவேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.