LOADING...
வானிலை அறிக்கை: மார்ச் 18- மார்ச் 22
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது

வானிலை அறிக்கை: மார்ச் 18- மார்ச் 22

எழுதியவர் Sindhuja SM
Mar 18, 2023
03:09 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 18-20ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 21ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மார்ச் 22ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யலாம்.

ட்விட்டர் அஞ்சல்

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பதிவான வெப்பநிலைகள்