12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழக வானிலை: தெற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை-3 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- நீலகிரி, கோவை கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை ஜூலை-4 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- நீலகிரி, கோவை, தேனி
கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களின் பட்டியல்
ஜூலை-4 கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி, மதுரை, விருதுநகர் ஜூலை-5 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- நீலகிரி, கோவை கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி ஜூலை-6 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- திருப்பூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை ஜூலை-7 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.