தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
ஒரு கீழடுக்கு சுழற்சியானது தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1.5 கிமீ உயரத்தில் நிலவுகிறது. நேற்று சுமார் 0.9 கி.மீ உயரத்தில் கடல் மட்டத்தில் விதர்பாவில் இருந்து தென் தமிழகம் வரை நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று குறைந்துள்ளது. தெற்கு ஒடிசா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று நிலவிய கீழடுக்கு சுழற்சியானது சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 1.5 கிமீ உயரம் வரை நீட்டித்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 10 முதல் மார்ச் 16 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையின் வானிலை நிலவரம்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எந்த பகுதியிலும் மழை பதிவாகவில்லை.