Page Loader
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில்  தொடர் மழைக்கு வாய்ப்பு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் தொடர் மழைக்கு வாய்ப்பு

எழுதியவர் Sindhuja SM
Apr 06, 2023
07:21 pm

செய்தி முன்னோட்டம்

தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒதுக்குபுறமான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஏப்ரல் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒதுக்குபுறமான பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ட்விட்டர் அஞ்சல்

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பதிவான இடங்கள்