Page Loader
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் 
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் 

எழுதியவர் Sindhuja SM
Apr 19, 2023
05:24 pm

செய்தி முன்னோட்டம்

தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 20ஆம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 21 தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஏப்ரல் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது

ட்விட்டர் அஞ்சல்

அடுத்த 5 நாட்களுக்கான வானிலை செய்தி சுருக்கம்