இன்று பலியிடப்பட்ட ஆட்டின் மீது 'ராம்' என்று எழுதப்பட்டிருந்தால் சர்ச்சை
மும்பையில் இன்று பலியிடப்பட்ட ஒரு ஆட்டின் மீது இந்து கடவுளான ராமரின் பெயர் எழுதப்பட்டிருந்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மும்பையில் பலியிடப்பட்ட ஒரு ஆட்டின் மீது 'ராம்' எழுதப்பட்டிருந்தது வைரலான ஒரு வீடியோவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. ஒரு இறைச்சிக் கடையில் பலியிடப்பட்ட ஆட்டின் தோலில் 'ராம்' என்று எழுதி இருந்ததை அந்த வீடியோ காட்டியது. மேலும், ஒரு இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த செயலை எதிர்த்து கேள்வி எழுப்புவதும் அந்த வீடியோவில் தெரிந்தது. இதனையடுத்து, அந்த ஆட்டு இறைச்சிக் கடையும் மூடப்பட்டுள்ளது.
மத உணர்வுகளை புண்படுத்தியதாக மூவர் கைது
அந்த வீடியோ வைரலானதை அடுத்து, பஜ்ரங் தள ஆர்வலர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து அந்த இறைச்சி கடைக்கு சீல் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொதுவாக ஆடுகள் பலியிடப்படும். இந்நிலையில், இன்று பக்ரீத் என்பதால் மும்பையின் பேலாப்பூரை சேர்ந்த ஒரு வாடிக்கையாளருக்கு விற்பனை செய்வதற்காக அந்த ஆட்டின் மீது ராம் என்று எழுதப்பட்டிருந்தாக தகவல்கள் கூறுகின்றன. முகமது ஷபி ஷேக், சஜித் ஷஃபி ஷேக் மற்றும் குய்யம் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ம மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக இந்திய தண்டனைச் சட்டம் 295(A) மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழும், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.