வைரல் வீடியோ: ஜங்கிள் சஃபாரியின் போது கவிழ்ந்த ஜீப்
மேற்கு வங்க மாநிலம் ஜல்தாபரா தேசிய பூங்காவில் 6 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப், ஜங்கிள் சஃபாரியின் போது கவிழ்ந்தது. காண்டாமிருகத்தை பார்த்து அவசரமாக ரிவேர்ஸ் எடுத்ததால் நிலை தடுமாறி ஜீப் கவிழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தை IFS அதிகாரி ஆகாஷ்-தீப் பாதவான் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். "சாகச விளையாட்டுகளில் பாதுகாப்பு மற்றும் மீட்புக்கான வழிகாட்டுதல்கள் நாடு முழுவதும் உள்ள வனவிலங்கு சஃபாரிகளில் செயல்படுத்தப்படுவத்த பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். சஃபாரிகள் இப்போது சாகச விளையாட்டுகளாக மாறி வருகின்றன! இன்று ஜல்தாபராவில்!" என்று ஆகாஷ் தீப் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் நலமாக இருக்கின்றனர் என்று ஆகாஷ் தீப் ட்விட்டர் கமெண்ட்களில் தெரிவித்துள்ளார்.