Page Loader
வைரல் - 8 மணி நேரம் ஸ்கூட்டர் பயணம் 50 வயதுடைய பெண் தோழிகள்
ட்ரெண்டிங்-8 மணி நேரம் ஸ்கூட்டர் பயணம் 50 வயதுடைய பெண் தோழிகள்

வைரல் - 8 மணி நேரம் ஸ்கூட்டர் பயணம் 50 வயதுடைய பெண் தோழிகள்

எழுதியவர் Nivetha P
Feb 07, 2023
06:33 pm

செய்தி முன்னோட்டம்

வைரல்- 'நம் வாழ்நாள் பயணம்' என்னும் வாக்கியத்தை பதிவு செய்து, அதோடு 8மணி நேர ஸ்கூட்டர் பயண அனுபவம் குறித்தும் இணையத்தில் பதிவு செய்துள்ளார்கள் இந்த இரண்டு 50வயதுடைய பெண்கள். கீதா, சாதனா என்னும் இவர்கள் 1983ம்ஆண்டு தாங்கள் படித்த பள்ளியில் 7ம்வகுப்பு படிக்கும்போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவுசெய்து, தங்களது 40வருட நட்பினை கொண்டாடி வருகிறார்கள். இந்த இருபெண்களின் கதையை இன்ஸ்டாகிராமில் 'அஃபிஷியல் யூமன்ஸ் ஆப் பாம்பே' பதிவு செய்துள்ளது. அதன்படி, முதலில் ஸ்ரீவர்தனிற்கு செல்ல மொத்தம் 6பேர் திட்டமிட்ட நிலையில், கடைசிநேரத்தில் பல்வேறு காரணங்களால் நான்கு பேர் வரவில்லை. இதனால் நானும், சாதனாவும் மட்டும் எங்கள் ஸ்கூட்டரில் 8 மணிநேரம் பயணம் மேற்கொண்டு ஸ்ரீவர்தனுக்கு சென்றடைந்தோம் என்று கீதா தெரிவித்துள்ளார்.

Instagram அஞ்சல்

50 வயதில் எட்டு மணி நேர ஸ்கூட்டர் பயணம்

2016ம் ஆண்டு சந்திப்பு

30 வருடத்திற்கு பிறகு பள்ளி தோழியை சந்தித்த தருணம் குறித்து கீதா

மேலும், நாங்கள் நினைத்து கூட பார்த்திராத அனுபவங்களை இந்த பயணத்தின்போது நாங்கள் அனுபவித்தோம். இரவு 12மணிக்கு காடு பகுதிகளை கடந்தோம். குடும்பத்தோடு இல்லாமல் என் தோழியோடு தனியாக பயணித்ததே மிக முக்கிய அம்சமாகும் என தனது அனுபவங்களை கீதா மிக சந்தோஷமாக தெரிவித்துள்ளார். பள்ளியில் நெருங்கிய நண்பர்களாக இருந்த சாதனாவும் கீதாவும் 1986ல்தொடர்பை இழந்துள்ளார்கள். அதன்பின்னர் 2016ம்ஆண்டு இருவருக்கும் தெரிந்த ஓர் நண்பர் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்கள். இதுகுறித்து சாதனா கூறுகையில், 30வருடங்களுக்கு பிறகு சாதனாவை நான் பார்த்தபொழுது பேச்சு வரவில்லை, அழுகை தான் வந்தது. நாங்கள் எங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் பகிர்ந்து கொண்டோம் என்று கூறியுள்ளார். இவர்களது வீடியோ தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.