Page Loader
வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்'
அந்த ஆட்கள் வெளியே வந்து என் காலரைப் பிடித்து அறைந்து குத்தினார்கள்: காவல்துறை அதிகாரி

வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்'

எழுதியவர் Sindhuja SM
Feb 04, 2023
09:17 pm

செய்தி முன்னோட்டம்

மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போலீஸ்காரரை கேலி செய்த "பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள்" அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அந்த நபர்கள் குடிபோதையில் இருந்ததாக காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். இந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த நபர்களுக்கு எதிராக போலீசார் முதல் தகவல் அறிக்கையை(FIR) பதிவு செய்துள்ளனர். ராமேந்திர சிங்பாதுரியா என்ற போலீஸ்காரர், வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் தன்னை கேலி செய்யத் தொடங்கியதாக கூறியுள்ளார். அப்போது பாஜக எம்எல்ஏ மனோஜ் சவுத்ரியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் நபர்கள் அதிகாரியை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

தாக்குதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ: