2026 சட்டசபை தேர்தல்: அதிமுகவுடன் கூட்டணியா? விஜய்யின் தவெக கூறுவது என்ன?
செய்தி முன்னோட்டம்
2026 சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பற்றி பலரும் பேசி வரும் நிலையில், சமீபகாலமாக விஜய்யின் தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்ற செய்தியும் வெளியாகின.
இந்த சூழலில், த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், கட்சியின் கொள்கைகள், கொள்கை எதிரிகள், அரசியல் எதிரிகள் மற்றும் தேர்தல் நிலைப்பாடு குறித்து கழகத்தின் தலைவர் தெளிவாக உரையாற்றியுள்ளார். அவரது வழிகாட்டுதலின்படி, 2026 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுத் தாயக மக்களுக்கு நலன் கண்ணியமான ஆட்சி வழங்குவதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்," என குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | "பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி" -தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்#SunNews | #TVKVijay | #TVK pic.twitter.com/0SNMR97wDp
— Sun News (@sunnewstamil) November 18, 2024
கூட்டணி
அதிமுகவுடன் கூட்டணியா?
புஸ்ஸி ஆனந்தின் அறிக்கையில் மேலும்,"அ.தி.மு.க.,வுடன் த.வெ.க., கூட்டணி என்று வெளியாகி வரும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது. த.வெ.க.,வின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. மக்களின் பேராதரவோடு பெரும்பான்மையுடன் வென்று தமிழக மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்", எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார் விஜய்.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை வெளியிட்ட அவர், தங்களின் அரசியல் எதிரி யார் என்பதையும் அறிவித்தார்.
மேலும், தனது கன்னி பேச்சில், அதிகபட்சமாக ஆளும் திமுகவையே அவர் சாடினார்.
ஆனால், அ.தி.மு.க., பற்றி எந்த விமர்சனங்களையும் முன்வைக்கவில்லை. இதுவே இந்த கூட்டணி பேச்சிற்கு வழிவகுத்தது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
அதிமுகவுடன் கூட்டணி என்பது முற்றிலும் தவறான செய்தி: த.வெ.க விளக்கம் 😂 pic.twitter.com/2ZSViL5uxF
— சமூகநீதி🏴 (@samooganeethi) November 18, 2024