LOADING...
புதுவைக்கு மாநில அந்தஸ்து உறுதி! தவெக விஜய் வெளியிட்ட அதிரடி வாக்குறுதிகள்!
புதுவைக்கு மாநில அந்தஸ்து உறுதி தவெக விஜய் வெளியிட்ட அதிரடி வாக்குறுதிகள்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து உறுதி! தவெக விஜய் வெளியிட்ட அதிரடி வாக்குறுதிகள்!

எழுதியவர் Vasuki Ravichandran
Apr 04, 2026
05:40 pm

செய்தி முன்னோட்டம்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தட்டாஞ்சாவடியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். ஏற்கனவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணிக் கட்சிகளை விமர்சித்த அவர், புதுச்சேரியின் தலையெழுத்தை மாற்றப்போகும் தனது திட்டங்களை வரிசைப்படுத்தினார்.

தவெக-வின் தேர்தல் வாக்குறுதிகள்

முழுமையான மாநில அந்தஸ்து

முழுமையான மாநில அந்தஸ்து: துணைநிலை ஆளுநரின் தலையீடு இல்லாத, புதுச்சேரிக்கான 100% முழுமையான மாநில அந்தஸ்தைப் பெறச் சட்ட ரீதியாக அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். உள்ளாட்சித் தேர்தல்: தவெக ஆட்சி அமைந்த 6 மாதங்களுக்குள் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும். மகளிர் நலம்: கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு உதவித்தொகையாக ரூ. 25,000 வழங்கப்படும். மருத்துவக் காப்பீடு: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான விரிவான மருத்துவக் காப்பீடு உறுதி செய்யப்படும். இலவச மின்சாரம்: வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.

மண்டல வாரியான வளர்ச்சி:

வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம்:

அரசுப் பணிகள்: அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். விவசாயிகள்: விவசாயிகளுக்கு 100% பயிர்க் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள்: விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளுக்குத் தேவையான டீசலுக்கு லிட்டருக்கு ரூ. 20 மானியம் வழங்கப்படும். பிராந்திய வளர்ச்சித் திட்டங்கள்: காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில், அந்தப் பிராந்தியங்களின் வளர்ச்சிச் செலவினங்களுக்காக 25% நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென விஜய் உறுதியளித்தார்.

Advertisement

அரசியல் விமர்சனம்

காங்கிரஸ் - திமுக கூட்டணி மீது சாடல்

தனது உரையில் விஜய் பேசுகையில், "இங்குள்ள இரண்டு கூட்டணிகள்குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். காங்கிரஸ் - திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே இங்கு 5 முதல் 6 முறை ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதா?" எனக் கேள்வி எழுப்பினார். புதுச்சேரியின் உரிமைகளை மீட்டெடுக்கத் தவெக ஒரு புதிய மாற்றமாகத் திகழும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement