காஞ்சிபுரத்தில் ஒரு ஸ்கூட்டர் மீது மோதி அதை 50 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற BMW கார்
செய்தி முன்னோட்டம்
காஞ்சிபுரத்தில் இருவர் சென்று கொண்டிருந்த ஒரு இரு சக்கர வாகனம் மீது ஒரு BMW கார் மோதி, அந்த ஸ்கூட்டரை 50 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றதால் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது.
வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்ட பாலமுருகன் தனது நண்பர் ரமேஷுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது, ஐயங்கார் கலாம் பகுதி அருகே, எதிரே வந்த BMW கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தின் போது பதிவான சிசிடிவி வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம்
50 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்த நபர்
அந்த சிசிடிவி காட்சிகளின் படி, ஸ்கூட்டர் மீது அந்த கார் மோதியதும் நிற்காமல் 50 மீட்டர் தூரம் வரை அந்த ஸ்கூட்டரை இழுத்துச் சென்றிருக்கிறது.
அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
பலத்த காயமடைந்த பாலமுருகன் மற்றும் ரமேஷ் ஆகியோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாலமுருகன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்த நிலையில், ரமேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள தமிழக காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.