Page Loader
வீடியோ: ஹெல்மெட் அணியாமல் பிடிபட்ட நபர் போலீஸ்காரரை கடித்ததால் பரபரப்பு 

வீடியோ: ஹெல்மெட் அணியாமல் பிடிபட்ட நபர் போலீஸ்காரரை கடித்ததால் பரபரப்பு 

எழுதியவர் Sindhuja SM
Feb 13, 2024
04:53 pm

செய்தி முன்னோட்டம்

பெங்களூரு போக்குவரத்து காவலரை ஒருவர் கடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பெங்களூரு வில்சன் கார்டன் 10வது கிராஸ் அருகே ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டி சென்ற சையத் சஃபி என்ற நபர் விதிகளை மீறியதற்காக போக்குவரத்து போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது, பிடிபட்ட அவரின் ஸ்கூட்டர் சாவியை ஒரு போலீஸ் அதிகாரி பறிமுதல் செய்தார். மற்றொரு அதிகாரியான காவலர் சித்தராமேஸ்வர கவுஜலகி விதிமீறலைப் பதிவுசெய்ய சம்பவத்தை படம்பிடிக்க முயன்றார். அதனை அடுத்து, பிடிபட்ட அந்த நபர் போக்குவரத்து காவல்த்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டத்தோடு, தன் சாவியை திரும்ப பெறும் நோக்கத்தோடு ஒரு காவலரின் விரலை கடித்தார். அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

வைரலாகும் பெங்களூரு வீடியோ