LOADING...
செப்டம்பர் 9 அன்று துணை ஜனாதிபதி தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

செப்டம்பர் 9 அன்று துணை ஜனாதிபதி தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 01, 2025
01:13 pm

செய்தி முன்னோட்டம்

17வது துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முன்னதாக, 2022 முதல் பதவியில் இருந்த ஜகதீப் தன்கர் நடப்பு பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாள் அன்று உடல் நலக்குறைவை காரணம் காட்டி பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, தற்போது தேர்தல் ஆணையம் புதிய துணை ஜனாதிபதி தேர்தலை அறிவித்துள்ளது. தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி, வாக்குப்பதிவு செப்டம்பர் 9, 2025 (செவ்வாய்கிழமை) அன்று நடைபெறும். இதன் மூலம், இந்தியாவின் அடுத்த துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான அரசியலமைப்பு செயல்முறை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

விபரங்கள்

தேர்தல் ஆணையத்தின் விரிவான விபரங்கள்

தேர்தலுக்கான அழைப்பு ஆகஸ்ட் 7, 2025 (வியாழன்) அன்று வெளியிடப்படும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21, 2025 (வியாழன்). வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஆகஸ்ட் 22, 2025 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 25, 2025 (திங்கள்). தேவைப்பட்டால், வாக்களிப்பு செப்டம்பர் 9, 2025 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும். தேவைப்பட்டால், வாக்கு எண்ணிக்கையும் அதே நாளில் நடத்தப்படும். ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாசார பிரதிநிதித்துவ முறையைப் பயன்படுத்தி ரகசிய வாக்குச்சீட்டு மூலம் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களால் துணை ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

ட்விட்டர் அஞ்சல்

விபரங்கள்