
வெற்றி துரைசாமியின் DNA பரிசோதனை முடிவு இன்று வெளியாகும் என தகவல்
செய்தி முன்னோட்டம்
ஹிமாச்சலபிரதேசத்தில் உள்ள சட்லெஜ் ஆற்றில் வெற்றி துரைச்சாமி சென்ற கார் விழுந்து விபத்துக்குள்ளாகி 8 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை அவரின் நிலை என்ன என்பதற்கான விடை தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில், விபத்து பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட மனித மூளை பகுதியின் DNA பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைச்சாமி, ஹிமாச்சல் பிரதேசத்திற்கு விடுமுறைக்கு சென்ற இடத்தில், சட்லெஜ் நதியில் விழுந்து மாயமானார்.
அவரின் உடலை தேடும் பணி ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. அவருக்கு சொந்தமான உடமைகள் அடங்கிய சூட்கேஸ் மட்டும் கிடைத்த நிலையில், அவரின் நிலை பற்றிய தகவல் எதுவும் இல்லை.
ட்விட்டர் அஞ்சல்
DNA பரிசோதனை முடிவு
#JustNow | சட்லஜ் ஆற்றுப் பாறையில் இருந்த மனித மூளையின் பாகங்கள் யாருடையது? - இன்று முடிவு#SunNews | #VetriDuraisamy | #HimachalPradesh pic.twitter.com/juaySh52wa
— Sun News (@sunnewstamil) February 11, 2024