Page Loader
2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு
பொங்கலுக்கான இலவச வேட்டி சேலை குறித்த ஆய்வு-தமிழக முதல்வர்

2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு

எழுதியவர் Nivetha P
Dec 31, 2022
04:52 pm

செய்தி முன்னோட்டம்

2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மிக விமர்சையாக கொண்டாப்படவுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கமாக பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம், எனினும் இது குறித்து அரசு சார்பில் எவ்வித தகவலும் வரவில்லை என்பதால் குழப்பமான சூழல் நிலவியது. இதனை தொடர்ந்து, பொங்கலுக்கு வழக்கம் போல் தமிழக மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

ரூ.487.98 கோடி நிதி ஒதுக்கீடு

1 கோடியே 79 லட்சம் குடும்ப அட்டைதார்களுக்கு வழக்கம்போல் இலவச வேட்டி, சேலை

அவர் அறிக்கையில், "பொதுமக்களுக்கு பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்த ஆய்வுக்கூட்ட செய்திகள் பல ஊடங்களில் வெளியாகியது. எனினும், இது எதனையும் பார்க்காத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இலவச வேட்டி, சேலை வழங்கவில்லை என்றால் போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று ஓர் வெற்று அறிக்கையினை வெளியிட்டுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "1 கோடியே 79 லட்சம் குடும்ப அட்டைதார்களுக்கு வழக்கம் போல் இந்தாண்டும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். இது குறித்த திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்த கொள்கை அளவிலான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டதுடன், ரூ.487.92 கோடி நிதியையும் ஒதுக்கி தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்" என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.