
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு வெளியானது
செய்தி முன்னோட்டம்
கடந்த 1992ம்ஆண்டு தமிழ்நாடு, தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள வாச்சாத்தி மலைக்கிராமத்தில் வன்முறை-பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.
இந்த வழக்கில் தருமபுரி நீதிமன்றம் கடந்த 2011ம்ஆண்டு 269 பேரில் அப்போது உயிரோடிருந்த 215 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றவர்கள் சார்பில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் இன்று(செப்.,29) தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அவர் உறுதி செய்து, மேல்முறையீட்டு வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தொடர்ந்து குற்றவாளிகளிடம் இருந்து ரூ.5 லட்சம் பெற்று, அரசு ஓர் ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்ச நிவாரண தொகையினை பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
தீர்ப்பு
#BREAKING | வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் 215 குற்றவாளிகள் என தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!#SunNews | #Vachathi | #MadrasHC pic.twitter.com/dXcwUJGYpH
— Sun News (@sunnewstamil) September 29, 2023