LOADING...
'என்னை முதலமைச்சராக்க முயன்றார்கள்': உண்மையை உடைத்த தொல். திருமாவளவன்
திமுக, அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததை ஒப்புக்கொண்ட தொல். திருமாவளவன்

'என்னை முதலமைச்சராக்க முயன்றார்கள்': உண்மையை உடைத்த தொல். திருமாவளவன்

எழுதியவர் Venkatalakshmi V
May 12, 2026
02:03 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றிக் கழகத் (TVK) தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) தலைவர் தொல். திருமாவளவன் பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு இன்று விளக்கமளித்துள்ளார். குறிப்பாக, தவெக அரசுடன் திரைமறைவில் எந்தவிதமான பேரமும் பேசப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். திமுக மற்றும் அதிமுக இணைந்து தன்னை முதலமைச்சராக்க முயன்றதாகவும், அதனை காங்கிரஸ் தடுத்ததாகவும் வெளியான தகவல் குறித்துப் பேசிய திருமாவளவன், "என்னை முதலமைச்சராக்கும் முயற்சியில் சில கட்சிகள் ஈடுபட்டதாக எனக்கும் தகவல் கிடைத்தது. சிலர் எங்களை அணுகினார்கள் என்பது உண்மைதான், ஆனால் அதற்கு நாங்கள் இணங்கவில்லை. இதில் காங்கிரஸ் எந்த வகையில் தலையிட்டது என்பது எனக்குத் தெரியாது" என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

தாமதம்

ஆதரவு முடிவில் தாமதம் ஏற்பட்டது ஏன்?

விசிக-வின் முடிவு தாமதமானதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "அரசியல் கட்சிகளுக்கு முடிவெடுப்பதில் உள்ள சிரமம் மற்றவர்களுக்குப் புரியாது. உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க முடியாது. இடதுசாரிகளுடன் ஆலோசித்து, கட்சியின் உயர்நிலை குழுவில் விவாதித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்பட்டது". "அமைச்சரவையில் பங்கேற்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இரவு 11 மணிக்கு மேல் ஆலோசனைகள் நடந்ததால் தான் அறிவிப்பு வெளியாகத் தாமதமானது. இது பதவிக்கான பேரம் அல்ல, எதிர்காலத்திற்கான நிலைப்பாடு" என்று விளக்கமளித்தார்.

Advertisement

அமைச்சரவை

தவெக அமைச்சரவையில் விசிக இடம்பிடிக்குமா?

தவெக அமைச்சரவையில் விசிக சேருமா என்ற கேள்விக்கு, "அமைச்சரவையில் சேருமாறு தொடர்ந்து என்னிடம் வலியுறுத்தி வருகின்றனர். முதலமைச்சர் விஜய் இன்று என்னை மரியாதை நிமித்தமாகச் சந்திக்க வருகிறார். ஆனால், அவரிடம் நான் எந்தக் கோரிக்கையையும் வைக்கப்போவதில்லை" என்று திருமா கூறினார். மேலும், திமுக கூட்டணியில் நீடிப்பதால் அவர்களின் பரிந்துரைகளைத் தூக்கி எறிந்துவிட முடியாது என்றும், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த ஆதரவை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement