LOADING...
கடைசி நேரத்தில் டிக்கெட் கேன்சல் பண்றீங்களா? வந்தே பாரத், அம்ரித் பாரத் ரயில்களுக்கு புதிய ரீஃபண்ட் விதிகள் அறிவிப்பு
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் டிக்கெட் ரத்து தொடர்பாக புதிய ரீஃபண்ட் விதிகள் அறிவிப்பு

கடைசி நேரத்தில் டிக்கெட் கேன்சல் பண்றீங்களா? வந்தே பாரத், அம்ரித் பாரத் ரயில்களுக்கு புதிய ரீஃபண்ட் விதிகள் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jan 24, 2026
12:16 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய ரயில்வே தனது பிரீமியம் ரயில்களான வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் மற்றும் அம்ரித் பாரத் II ரயில்களுக்கான டிக்கெட் ரத்து விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது. ஜனவரி 16 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய திருத்தங்களின்படி, கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகளுக்கு இனி பணம் திரும்பக் கிடைக்காது. ரயில்களில் இருக்கைகள் காலியாக இருப்பதைத் தவிர்க்கவும், பயணத் திட்டமிடலை முறைப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விதிகள்

புதிய ரீஃபண்ட் விதிகள் என்ன?

உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்யும்போது வசூலிக்கப்படும் கட்டணங்கள் இதோ: 8 மணி நேரத்திற்குள்: ரயில் புறப்படுவதற்கு முன்னதாக, 8 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால், ஒரு பைசா கூட ரீஃபண்ட் (Refund) கிடைக்காது. முழுத் தொகையும் ரத்து கட்டணமாகப் பிடிக்கப்படும். 72 மணி நேரத்திற்கு மேல்: ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக ரத்து செய்தால், மொத்தத் தொகையில் 25% ரத்து கட்டணமாகப் பிடிக்கப்படும். 72 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை: இந்த இடைப்பட்ட காலத்தில் ரத்து செய்தால், டிக்கெட் விலையில் 50% கட்டணமாக வசூலிக்கப்படும்.

மாற்றம்

ஏன் இந்த அதிரடி மாற்றம்?

சாதாரண ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் மற்றும் ஆர்ஏசி (RAC) வசதிகள் இருக்கும். ஆனால், வந்தே பாரத் ஸ்லீப்பர் போன்ற ரயில்கள் 100 சதவீதம் உறுதி செய்யப்பட்ட பெர்த் கொள்கையின் கீழ் இயங்குகின்றன. கடைசி நேரத்தில் பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்யும்போது, அந்த இருக்கை வேறு யாருக்கும் கிடைக்காமல் வீணாவதோடு, ரயில்வேக்கு வருவாய் இழப்பையும் ஏற்படுத்துகிறது. இதனைத் தவிர்க்கவே 8 மணி நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கவனிக்க வேண்டியவை

பயணிகள் கவனிக்க வேண்டியவை

இதற்கு முன்பு, பிரீமியம் ரயில்களில் கூட 4 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்தால் ஒரு பகுதி பணம் திரும்பக் கிடைக்கும் வசதி இருந்தது. ஆனால், இனி அந்தச் சலுகை வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் அம்ரித் பாரத் II ரயில்களுக்குப் பொருந்தாது. எனவே, இந்தப் பயணத்தைத் திட்டமிடும் பயணிகள் தங்களது முடிவை முன்கூட்டியே எடுத்துவிடுவது பண இழப்பைத் தவிர்க்க உதவும்.

Advertisement