வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
செய்தி முன்னோட்டம்
கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான சன்மார்க்க பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
வடலூரில் திரு அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய தருமச்சாலை மற்றும் சத்திய ஞான சபை ஆண்டு தோறும் தைப்பூச ஜோதி தரிசன விழாவை பிரம்மாண்டமாக நடத்தி வருகிறது.
அந்த வகையில் இன்று 154வது ஜோதி தரிசன விழா அதிகாலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டு, தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தருமசாலையில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது.
பிறகு, காலை 10 மணிக்கு சத்திய ஞான சபையில் சன்மார்க்கக் கொடியேற்றமும் நடைபெற்றது.
ஜோதி தரிசனம்
வடலூரில் ஜோதி தரிசன நிகழ்வுகள்
அதன் தொடர்ச்சியாக முக்கிய விழாவான தைப்பூச ஜோதி தரிசன நிகழ்ச்சி சத்திய ஞான சபையில் நடைபெற்றது.
காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான அன்பர்கள் 'அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை' என முழக்கமிடி ஜோதி தரிசனம் செய்தனர்.
பின்னர், காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, 12ம் தேதி காலை 5.30 மணி என 6 நேரங்களில் ஜோதி தரிசனம் நடைபெறும்.
13ஆம் தேதி, வியாழன் கிழமை, 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் சித்திவளாகத் திருஅறை தரிசனமும் நடைபெறும்.
தைப்பூச ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கானோர் ஜோதி தரிசனம் செய்தனர்.