உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணி: இனி மெஷின் வேண்டாம், கைகளாலேயே துளையிட திட்டம்
செய்தி முன்னோட்டம்
உத்தரகாண்டில் உள்ள சில்க்யாரா-பர்கோட் இடையே கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 41 தொழிலாளர்கள் 13-நாட்களாக சிக்கி தவித்து வருகின்றனர்.
அவர்களை மீட்கும் பணியில் வரிசையாக சிக்கல்கள் ஏற்பட்டு வந்த நிலையில், பணி இறுதி கட்டத்தை நெருங்கியதாக இரு தினங்களுக்கு முன்னர் கூறப்பட்டது.
எனினும், மாற்று பாதை அமைக்கும் முயற்சியும் இயந்திர கோளாறால் தொடர்ச்சியாக தடைப்படவே, மீதமுள்ள பகுதிகள் கைகளால் துளையிட திட்டமிடப்பட்டுள்ளது என உத்தராகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
41 தொழிலாளர்களை மீட்கும் நோக்கில், சுரங்கத்தின் நுழைவுப் பகுதி வழியாக, இடிபாடுகளின் ஊடாக 800 மி.மீ. விட்டத்துக்கு துளையிடும் பணி நடைபெற்று வந்தது.
இந்த பணிகளை மேற்பார்வையிட உத்தரகாண்ட் முதல்வர் அங்கேயே முகாமிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
card 2
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள்
இந்த மாற்று பாதையை துளையிட, இந்தியாவிலிருக்கும் இயந்திரங்கள் பயனளிக்காத நிலையில், பாறைகளை வேகமாக குடையும் அமெரிக்காவின் ஆகர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
46 மீட்டர் அளவுக்கு குடையப்பட்டு, இரும்பு பைப்புகள் நுழைக்கப்பட்டு, அதன்மூலம் தொழிலாளர்களை ஸ்ட்ரெச்சரில் வெளியே அழைத்து வர திட்டமிடப்பட்டது.
இன்னும் 10 சதவீத பணிகளே எஞ்சியிருந்த நிலையில், நேற்றிரவு திடீரென அந்த அகர் இயந்திரத்தின் பிளேடுகள் உடைந்து இயந்திரம் பழுதடைந்து, அதன் பாகங்கள் உடைந்தன.
அதனால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. உடைபட்ட பாகங்களும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது கூடுதல் விஷயம்.
card 3
செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் தாமி
இந்த மீட்பு நடவடிக்கைகளை பற்றி நிபுணர்களிடம் கலந்தாலோசித்த முதல்வர் தாமி, பின்னர் செய்தியாளகர்ளிடம் பேசினார்.
"மீட்புப் பணி எவ்வளவு சிரமத்துக்கும் சவால்களுக்கும் மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிவார்கள். மிக நெருக்கமாக சென்ற நிலையில், இயந்திரம் பழுதடைந்து உள்ளே சிக்கிக் கொண்டுள்ளது. நாளை காலைக்குள் இயந்திரம் வெளியே எடுக்கப்பட்டு விடும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்".
"அதன் பிறகு, மீதமுள்ள பகுதியை கைகளால் குடைய திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் பரிசீலித்து நடவடிக்கைகளை எடுக்கிறோம். ஆகர் இயந்திரத்தை வெட்டி எடுக்க ஹைதராபாத்தில் இருந்து பிளாஸ்மா இயந்திரத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என தெரிவித்தார்.