UPI மூலம் EMI வசதி.. அறிமுகப்படுத்தியது ICICI
செய்தி முன்னோட்டம்
யுபிஐ (UPI) மூலமாக கடன் வாங்கும் வசதியை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கடந்த வாரம் தொடங்கி வைத்தார். தற்போது யுபிஐ-யிலேயே இஎம்ஐ (EMI) வசதியை முதன் முதலாக அறிமுகப்படுத்தியிருக்கிறது ஐசிஐசிஐ வங்கி.
யுபிஐ மூலமாக ஸ்கேன் செய்து இஎம்ஐ வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது ஐசிஐசிஐ வங்கி.
அந்த வங்கியில் பேலேட்டர் (PayLater) சேவைக்கு தகுதியான வாடிக்கையாளர்கள் இந்த யுபிஐ இஎம்ஐ வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவித்திருக்கிறது அந்த வங்கி.
நிதி
யுபிஐ மூலம் இஎம்ஐ வசதி:
இந்த சேவையைப் பயன்படுத்துவதன் மூலம் 10,000 ரூபாய்க்கு மேல் மதிப்பிற்கு நாம் கடையில் பொருட்கள் வாங்கினாலோ அல்லது ஏதாவது சேவையைப் பயன்படுத்தினாலோ யுபிஐ இஎம்ஐ வசதியைப் பயன்படுத்தி 3, 6 அல்லது 9 மாத தவனைக் காலத்தில் அதனைக் கட்டுவதற்கான வசதி வழங்கப்படும்.
2018 முதன் முதலில் பேலேட்டர் வசதியை அறிமுகப்படுத்தியதும் ஐசிஐசிஐ வங்கி தான். இந்த சேவையினைப் பயன்படுத்தி சிறிய கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, பணத்தை சிறிது காலம் கழித்து திருப்பி செலுத்தும் வசதியினை அளித்தது அந்த வங்கி.
தற்போது அதனைப் பயன்படுத்தியே இந்த இஎம்ஐ சேவையையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஐசிஐசிஐ.