Page Loader
வேங்கைவயல் கிராமத்தில் துக்க வீட்டிற்கு வர எதிர்ப்பு - இரு தரப்பினர் போராட்டம் 
வேங்கைவயல் கிராமத்தில் துக்க வீட்டிற்கு வர எதிர்ப்பு - இரு தரப்பினர் போராட்டம்

வேங்கைவயல் கிராமத்தில் துக்க வீட்டிற்கு வர எதிர்ப்பு - இரு தரப்பினர் போராட்டம் 

எழுதியவர் Nivetha P
May 15, 2023
07:19 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது வேங்கைவயல் கிராமம். இந்த வேங்கைவயல் கிராமத்தில் ஏற்கனவே ஓர் தண்ணீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த சம்பவம் அரங்கேறி விஸ்வரூபமாக மாறியது. இது குறித்து தற்போதும் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து தங்கள் விசாரணையினை மேற்கொண்டு வருகிறார்கள். அப்படியிருக்கையில், மீண்டும் ஒரு பரபரப்பான சம்பவம் இந்த கிராமத்தில் அண்மையில் நடந்துள்ளது. கடந்த வாரத்தில் வேங்கைவயலில் மூதாட்டி ஒருவர் மரணம் அடைந்தார். அவரது வீட்டிற்கு துக்கம் விசாரிக்க ஓர் இயக்கத்தின் மாநில செயல் தலைவர் மற்றும் அந்த இயக்கத்தினை சேர்ந்தோர் நேற்று(மே.,14) இரவு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இறையூரை சேர்ந்த 10 பேர் இவர்களது காரினை மறித்து ஊருக்குள் வரவிடாமல் தகராறு செய்துள்ளார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

வேங்கைவயல் 

புதுக்கோட்டை டிஎஸ்பி ராகவி சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபாடு 

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து அந்த இயக்கத்தினை சேர்ந்த இளைஞரணி செயலாளர் நாகராஜ் என்பவர் வெள்ளனூர் கிராம காவல் நிலையத்தில் புகார் அளித்துளளார். அதே நேரம், வேங்கைவயல் கிராமத்தினை சேர்ந்த 20 பேர் தங்கள் கிராம சாலையில் அமர்ந்து வேங்கைவயல் வருவோரை யாரும் தடுத்து நிறுத்த கூடாது என்று போராட்டம் செய்துள்ளனர். மறுபக்கம் இறையூரை சேர்ந்த சுமார் 50 பேர் வெளியில் இருந்து வருவோரை அனுமதிக்க கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டிஎஸ்பி ராகவி அவர்கள் நேரில் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.