
ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது
செய்தி முன்னோட்டம்
ஆயுத பயிற்சி பெறுவதற்கு சட்டவிரோதமாக எல்லையை தாண்ட முயற்சித்த தமிழர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை கைது செய்த டெல்லி போலீஸார் கூறி இருப்பதாவது:
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் சமூக வாலித்தளங்கள் மூலம் இந்தியாவிற்கு எதிரான பல காரியங்களை செய்து வருகின்றனர்.
இவர்களின் வலையில் சில இந்தியர்களும் சிக்கி கொள்கின்றனர்.
இதில் சிலர் மும்பை வழியாக டெல்லி வந்து சட்ட விரோதமாக எல்லையை கடக்க இருப்பதாகவும் பாகிஸ்தான் சென்று அவர்கள் ஆயுத பயிற்சி பெற இருப்பதாகவும் எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சிறப்பு போலீஸ் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தியா
சமூக வலைத்தளம் மூலம் வழிநடத்திய தீவிரவாதி
இந்நிலையில், டெல்லி செங்கோட்டைக்கு பின்புறம் இருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் அலைந்து கொண்டிருந்ததாக தெரிய வந்தது. அவர்களை அழைத்து விசாரிக்கும் போது, அவர்களது பையில் இருந்து 2 துப்பாக்கிகள், தோட்டா அடங்கிய கார்ட்ரிஜ்கள், கத்தி, ஒயரை துண்டிக்கும் கருவி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த அப்துல்லா என்கிற அப்துர் ரஹ்மான்(26) என்பதும் மற்றொருவர் காலித் முபாரக் கான்(21)என்பதும் தெரியவந்தது.
அவர்கள் இருவரையும் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு தீவிரவாதி சமூக வலைத்தளம் மூலம் வழிநடத்தியதாக தெரியவந்திருக்கிறது.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஆயுதங்கள் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.