பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம்
சட்டக் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ கணக்கை இந்தியாவில் ட்விட்டர் முடக்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவு போன்ற சட்டப்படியான அறிவுறுத்தல்களை ட்விட்டர் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பது அந்த நிறுவனத்தின் விதிகளில் ஒன்றாகும். பாகிஸ்தான் அரசாங்கத்தின் ட்விட்டர் கணக்கை அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இருந்து அணுக முடிகிறது, இந்தியாவில் இருந்து மட்டுமே அணுக முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் கணக்கு முடக்கப்படுவது இது முறையல்ல
இது குறித்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்கள் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதற்கு பதிலளிக்கவும் மறுத்துவிட்டன. பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கு இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அரசாங்கத்தின் கணக்கு, அக்டோபர் 2022இல் முடக்கப்பட்டது. அதற்கு முன், ஜூலையில் சிறிது காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது. பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் முடக்கப்படுவது ஆறு மாதங்களில் இது இரண்டாவது முறையாகும்.