LOADING...
விமான நிலையம் முதல் மணல் கொள்ளை வரை: கரூரில் திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய்
கரூரில் திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய்

விமான நிலையம் முதல் மணல் கொள்ளை வரை: கரூரில் திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 27, 2025
07:43 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான செந்தில் பாலாஜியின் கோட்டையாகக் கருதப்படும் கரூரில், தனது தேர்தல் பரப்புரையின் போது ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். நாமக்கல்லில் இருந்து சாலை மார்க்கமாகக் கரூருக்குச் சென்ற அவருக்கு, வழிநெடுக தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கரூரில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசிய விஜய், கரூரைப் பெருமையாகச் சொல்ல பல விஷயங்கள் இருந்தாலும், அண்மைக்காலமாக ஒரே ஒரு பெயர்தான் பேமஸ் ஆக இருக்கிறது என்று மறைமுகமாக செந்தில் பாலாஜியைச் சுட்டிக்காட்டினார். மேலும், கரூர் மாவட்டத்திற்கு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார்.

விமான நிலையம்

கரூர் விமான நிலையம்

திமுகவின் 448 வது வாக்குறுதியான கரூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் குறித்த வாக்குறுதியை விஜய் பிரதானமாகக் கேள்வி எழுப்பினார். "விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதைச் செய்தார்களா? இப்போது மத்திய அமைச்சரிடம் சென்று கோரிக்கை வைக்கிறார்கள். பரந்தூர் விமான நிலையத்தைப் போல் இல்லாமல், கரூர் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நிலங்களைத் தேர்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று வலியுறுத்தினார். மணல் கொள்ளை மற்றும் கனிம வளக் கொள்ளை ஆகியவையே கரூரின் தீராத தலைவலிப் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் விஜய் குற்றம் சாட்டினார். "நம்ம ஆட்சி வந்தவுடன் பஞ்சப்பட்டி ஏரிக்கு உயிர் வரும்." என்றும் விஜய் உறுதியளித்தார்.