இந்தியாவின் பெரும் உதவிக்கு நன்றி தெரிவித்த துருக்கிய தூதர்
45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்ற துருக்கி நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவில் பெரும் அழிவை ஏற்படுத்திவிட்டது. இந்த பெரும் அழிவின் போது துருக்கிக்கு உதவுவதற்கு இந்தியா, 'ஆபரேஷன் தோஸ்த்' என்ற திட்டத்தை ஆரம்பித்தது. இந்த திட்டத்தின் மூலம் தேசிய பேரிடர் மீட்புப் படை(NDRF) மற்றும் இந்திய ராணுவம் துருக்கிக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உதவி செய்தனர். இது போன்ற பெரும் உதவிக்கு நன்றி தெரிவித்த இந்தியாவுக்கான துருக்கியின் தூதர் ஃபிராட் சுனெல், "இந்திய அரசாங்கத்தைப் போலவே, பெரிய மனம் கொண்ட இந்தியர்களும் பூகம்பப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். உங்கள் மதிப்புமிக்க உதவி உண்மையிலேயே பாராட்டதக்கது," என்று கூறியுள்ளார். அதோடு இந்திய மக்கள் வழங்கிய நிவாரண பொருட்களின் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.