
டிடிவி தினகரனை சந்தித்த ஓபிஎஸ் - இருவரும் இணைந்து செயல்படுவதாக அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் நேற்று(மே.,8)அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனை சென்னை அடையாறிலுள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது அவருடன் மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரனும் உடன் இருந்துள்ளார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்கள், ஒன்றாக இணைந்து செயல்படப்போவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் டிடிவி தினகரன் பேசுகையில், அதிமுக'வினை நாங்கள் ஒன்றாக இணைந்து மீட்டெடுப்போம்.
எனக்கும் ஓபிஎஸ்'ஸுக்கும் எவ்வித பகையும் கிடையாது.
சில காரணங்களால் பிரிந்திருந்தோம்.
ஓபிஎஸ் கரங்களை பிடித்துக்கொண்டு இருட்டில்கூட நடக்கலாம் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசியஅவர், சசிகலாவை சந்திப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.
கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம்.
ஸ்லீப்பர் செல்கள் எங்களுக்கு தேவையான தகவல்களை அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#NewsUpdate | "அதிமுகவை உறுதியாக மீட்டெடுப்போம்"- டிடிவி தினகரன் நம்பிக்கை#SunNews | #ADMK | @OfficeOfOPS | @EPSTamilNadu pic.twitter.com/XptZPF9Jw8
— Sun News (@sunnewstamil) May 9, 2023