Page Loader
'அனைத்து துறைகளிலும் சமமாக வளர்ச்சியடைவதை இந்தியா குறிக்கோளாக கொண்டுள்ளது': நிர்மலா சீதாராமன் 

'அனைத்து துறைகளிலும் சமமாக வளர்ச்சியடைவதை இந்தியா குறிக்கோளாக கொண்டுள்ளது': நிர்மலா சீதாராமன் 

எழுதியவர் Sindhuja SM
Feb 01, 2024
12:17 pm

செய்தி முன்னோட்டம்

அனைத்து துறைகளிலும் சமமாக மற்றும் விரிவாக வளர்ச்சி அடைவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கூறினார். இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது அவர் இதை கூறியுள்ளார். "அனைத்து துறையையும் உள்ளடக்கிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை(ஜிடிபி) உயர்த்த இந்தியா கடுமையாக உழைத்து வருகிறது. அதில் நிர்வாகம், மேம்பாடு மற்றும் செயல்திறன் ஆகிய அம்சங்கள் அடங்கும்" என்று நிர்மலா சீதாராமன் தனது இடைக்கால பட்ஜெட் 2024 உரையில் கூறினார். "அடுத்த ஐந்தாண்டுகள் முன்னோடியில்லாத வளர்ச்சியின் ஆண்டாக இருக்கும். மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை ஆகிய மூன்றும் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் திறனைக் கொண்டுள்ளன," என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றம்

"மக்களை மையமாகக் கொண்ட நம்பிக்கை அடிப்படையிலான அரசாங்கம்"

வளர்ச்சியின் உலகளாவிய சூழலைப் பற்றிப் பேசிய நிர்மலா சீதாராமன், உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பலவீனமான புவிசார் அரசியல் சூழ்நிலைகள் புதிய சவால்களுக்கு வழிவகுத்துள்ளன என்பதை ஒப்புக்கொண்டார். "உலகளாவிய விவகாரங்கள் மிகவும் சிக்கலானதாகி வருகின்றன. விநியோகச் சங்கிலிகள் இதனால் பாதிக்கப்ட்டுள்ளன.முக்கிய கனிமங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான போட்டி உலகமயமாக்கலை மறுவரையறை செய்துள்ளது. எனவே, ஒரு புதிய உலக ஒழுங்கு உருவாகி வருகிறது." என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். "எங்கள் அரசாங்கம் வெளிப்படையான, பொறுப்புணர்வுள்ள மற்றும் மக்களை மையமாகக் கொண்ட நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தை வழங்கியுள்ளது." என்று அவர் தெரிவித்துள்ளார்.