Page Loader
ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள்
பிரம்மாண்டமாக உருவாகும் திருச்சி விமான நிலையம்

ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள்

எழுதியவர் Siranjeevi
Jan 12, 2023
07:15 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு அடுத்தப்படியாக தமிழகத்தின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக திருச்சி உள்ளது. விமான நிலையத்தில், பயணிகள் போக்குவரத்தை நிர்வாகிக்க விமான நிலையத்தை விரிவுபடுத்தவும், விமான நிலைய ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, புதிதாகக் கட்டப்பட்டு வரும் புதிய முனையம் கட்டுமானப் பணிகள் ஜூன் மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ.951 கோடி செலவில் இந்த புதிய முனையம் கட்டப்படுகிறது. ஜூன் 23 ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும், சுமார் 2,900 பயணிகள் வந்து செல்லவும் அமைக்கப்பட்டுள்ளதாம்.

திருச்சி

விமான நிலையத்தில் உள்ள புதிய அம்சங்கள்

தொடர்ந்து, 48 பயணிகளின் வருகை மையங்கள் மற்றும் 10 போர்டிங் பாலங்கள் என பல நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. சுமார் 75 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, கட்டுப்பாட்டு அறை, துணை உபகரண அறைகள், டெர்மினல் ரேடார், ரேடார் உருவகப்படுத்துதல், மற்றும் ஆட்டோமேஷன் வசதிகள், விஎச்எஃப், ஏஏஐ அலுவலகங்கள் மற்றும் வானிலை ஆய்வு அலுவலகங்கள் அமைக்கப்படுகிறது.