திருச்சி விமான நிலையத்தின் 2வது முனையம் பயன்பாட்டுக்கு வந்தது
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதனையடுத்து ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த முனையம் மூடப்பட்டது. முன்னதாக இந்த புதிய முனையத்தின் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதியன்று பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது. பல வசதிகள் அடங்கிய விமான நிலைய முனையம் ரூ.1112 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய முனையம் ஒரே 3500க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சேவை வழங்கும் அளவிற்கு பெரியது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் செயல்பட துவங்கிய புதிய முனையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 12 விமானங்கள் தரையிறங்கும் வசதி உள்ளது. 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 240 விமானங்கள் தரையிறங்கி புறப்படலாம்.