கோடை விடுமுறைக்கான ட்ரெயின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
செய்தி முன்னோட்டம்
பள்ளி மாணவர்களுக்கு தேர்வு காலம் நெருங்கி விட்டது. அடுத்ததாக முழு ஆண்டு தேர்வு முடிந்ததும் அனைவரும் கோடை விடுமுறைக்கு சுற்றுலாத்தலங்களுக்கும், சொந்த ஊருக்கும் பயணம் செய்வது வாடிக்கை.
இந்திய ரயில்வே சமீபத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பை குறைத்து அறிவித்தது நினைவிருக்கலாம்.
அதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பயணிக்க தற்போது ட்ரெயின் டிக்கெட் முன்பதிவு துவங்கிவிட்டது.
120 நாட்களாக இருந்த ரெயில் டிக்கெட் முன்பதிவு காலம் தற்போது 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதால், ஏப்ரல் மாதத்தில் பயணிக்க விரும்புவோருக்கான முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு பயணம்
பாதுகாப்பு பயண நெறிமுறை
டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த நிலையில், தற்போது கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முழுமையாக மாற்றியமைப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரயில்வே அமைச்சகம் ஆறு மாத கால பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இதில் வண்ணக் குறியீடு கொண்ட பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் கூட்டத்தைக் கண்காணிப்பதற்கான மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும்.