Page Loader
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் என்கவுன்டர்: லஷ்கர் பயங்கரவாத தலைவர் உட்பட இருவர் பலி 

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் என்கவுன்டர்: லஷ்கர் பயங்கரவாத தலைவர் உட்பட இருவர் பலி 

எழுதியவர் Sindhuja SM
Jun 03, 2024
07:12 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய என்கவுன்டரில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கு இயக்க கமாண்டர் ரியாஸ் ஷெத்ரி மற்றும் அவரது கூட்டாளி ராயீஸ் தார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ரியாஸ் 2015 ஆம் ஆண்டு முதல் செயலில் இருந்தவர் ஆவர். கையெறி குண்டு தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாத ஆட்சேர்ப்பு உட்பட 20 க்கும் மேற்பட்ட பயங்கரவாத சம்பவங்களில் கொல்லப்பட்ட இருவருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. மேலே கூறிய குற்றங்கள் A+ வகை குற்றங்கள் என்பதால் அவர்களது தலைக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜம்மு-காஷ்மீர் 

பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த வீடு தீப்பிடித்து எரிந்தது

அந்த 2 பயங்கரவாதிகளும் தாங்கள் மறைவிடமாகப் பயன்படுத்திய வீட்டில் சிக்கிக் கொண்டதாகவும், துப்பாக்கிச் சண்டையின் போது அது தீப்பிடித்ததாகவும் அதிகாரிகள் இன்று காலை தெரிவித்திருந்தனர். புல்வாமா மாவட்டத்தின் நெஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, இன்று காலை சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. பாதுகாப்பு படைகளின் தேடுதல் குழுவினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது. மே 7ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகளைக் கொன்றனர். துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் லஷ்கர் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டின்(டிஆர்எஃப்) தீவிர செயல்பாட்டாளராக இருந்த பாசித் தார் கொல்லப்பட்டார்.