Page Loader
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 

எழுதியவர் Nivetha P
May 20, 2023
05:54 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் வெளியே செல்லமுடியாமல் தவிக்கின்றனர். இதற்கிடையே அதிர்ஷ்டவசமாக அவ்வப்போது கோடை மழை பொழிந்து வருகிறது. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பம் சலனம் காரணமாக மழை பெய்து வருவதால் அப்பகுதி வெளியிலின் தாக்கத்தில் இருந்து சற்று தணிந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வுமையம் அண்மையில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று(மே.,20)கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், குமரி, நெல்லை, ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, தென்காசி, கரூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post