Loading...
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள், தேர்வு தேதி அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள், தேர்வு தேதி அறிவிப்பு

எழுதியவர் Vasuki
Nov 04, 2026
03:13 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குரூப்-4 பணிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளை வியாழக்கிழமை (நவம்பர் 5) நள்ளிரவு 11.59 மணியுடன் நிறைவடைகிறது. கிராம நிர்வாக அலுவலர், பல்வேறு துறைகளின் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட 6,574 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இதுவரை 9.80 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்வித் தகுதி

அதிகரிக்கும் போட்டி

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச அடிப்படை கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும், அரசுப் பணி கனவோடு பத்தாம் வகுப்பு முடித்தவர்களுடன் போட்டிபோட்டு பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும் லட்சக்கணக்கில் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

கடைசி நேரத்தில் இணையதளப் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்கும் வகையில், தகுதியான விண்ணப்பதாரர்கள் இன்றே தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வு நாள்

விண்ணப்பிக்கும் முறை 

விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மூலமாக மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்ய முடியும். விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கும் நவம்பர் 5-ஆம் தேதியே கடைசி நாளாகும்.

தவறுகளைத் திருத்துவதற்கு நவம்பர் 9 முதல் 11-ஆம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

இத்தேர்வுக்கான எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT