TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு 2026: ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம், தேர்வு தேதி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. தமிழக அரசில் உயரிய அதிகாரமிக்க அரசு பணிகளில் சேர விரும்பும் லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, இத்தேர்விற்கு தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் வரும் ஜூன் 30-ஆம் தேதி முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் விண்ணப்பங்களை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in என்ற முகவரி வழியாக சமர்ப்பிக்க வேண்டும்.
தேதிகள்
முக்கிய தேர்வு தேதிகள் மற்றும் ஊதிய விபரம்
இத்தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் மாத சம்பள விபரங்களை தேர்வாணையம் பின்வருமாறு வரையறுத்துள்ளது. அதன்படி, விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: ஜூன் 30, 2026 விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 29, 2026 குரூப் 1 முதல்நிலை (Prelims) தேர்வு தேதி: செப்டம்பர் 6, 2026 மாதச் சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 56,100 முதல் ரூ. 2,05,700 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவரங்கள்
நிரப்பப்படும் முக்கிய உயர்பதவிகள்
குரூப் 1 தேர்வின் மூலம் தமிழக அரசின் மிக முக்கியப் பொறுப்புமிக்க சிவில் சர்வீஸ் பதவிகள் நிரப்பப்படவுள்ளன- துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர்(DSP) காவல்துறை மற்றும் வணிக வரித்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளின் உதவி ஆணையர் மற்றும் இதர முதன்மைப் பதவிகள் நிரப்பப்படவுள்ளன. இத்தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் துல்லியமான எண்ணிக்கை, வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்ட முழுமையான மற்றும் விரிவான தகவல்களைத் தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விரிவாக அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.