LOADING...
நாளை திட்டமிட்டபடி +2 தேர்வு முடிவுகள் வெளியாகும்: உறுதி செய்தது பள்ளிக்கல்வித்துறை; ரிசல்ட்டை எப்படி பார்ப்பது?
நாளை +2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகிறது

நாளை திட்டமிட்டபடி +2 தேர்வு முடிவுகள் வெளியாகும்: உறுதி செய்தது பள்ளிக்கல்வித்துறை; ரிசல்ட்டை எப்படி பார்ப்பது?

எழுதியவர் Sekar Chinnappan
May 07, 2026
06:45 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து சுமார் 8 லட்சம் மாணவர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தற்போது ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்டபடி நாளை (மே 8) தேர்வு முடிவுகள் வெளியாகாது என தகவல் வெளியானது. தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் மாற்றங்கள் மற்றும் புதிய அரசு அமைவதில் ஏற்பட்டுள்ள நிர்வாகக் காரணங்களால் இந்தத் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்குத் தேவையான அனைத்துத் தொழில்நுட்பப் பணிகளும் முடிவடைந்துவிட்ட போதிலும், முறையான அரசு ஒப்புதலுக்காகப் பள்ளிக் கல்வித் துறை காத்திருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது திட்டமிட்டபடி நாளை காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

தேர்வு முடிவுகள்

தேர்வு முடிவுகளைப் பார்க்கும் இணையதளங்கள் மற்றும் வழிமுறைகள்

தேர்வு முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம். இணையதளங்கள் தவிர்த்து, பள்ளியில் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் செல்போன் எண்களுக்குக் குறுஞ்செய்தி மூலமாகவும் முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். மேலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து நூலகங்களிலும் முடிவுகளைப் பார்க்கும் வசதி செய்யப்பட்டிருக்கும்.

Advertisement