சேகர் பாபு மகள் என்னிடம் உதவி கேட்டார் - பாஜக தலைவர் அண்ணாமலை
செய்தி முன்னோட்டம்
தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகளான ஜெயகல்யாணி சென்னை ஓட்டேரியை சேர்ந்த சதீஷை காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
இதில் அவருடைய தந்தையான சேகர்பாபுவிற்கு சம்மதமில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் சேகர்பாபுவின் மருமகனான சதீஷை,பெண்ணை மிரட்டிய வழக்கில் சென்னை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்.
இது தற்போது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பாஜக அண்ணாமலை பேட்டியில், அமைச்சர் சேகர்பாபுவின் மகள் முதலில் என்னிடம்தான் உதவிக்கேட்டு வந்தார்.
இது குடும்பவிஷயம், குடும்பவிவகாரத்தில் நாங்கள் தலையிடமாட்டோம். இதில் அரசியல் செய்யவிரும்பவில்லை.
எனவே உங்கள் தந்தை மற்றும் பெரியவர்களை வைத்துப்பேசிக்கொள்ளுங்கள். அல்லது கோர்ட்டுக்குச்செல்லுங்கள் என்றுக்கூறி அனுப்பி வைத்தேன்.
நான் இப்போதும் இதுகுறித்து பேச விரும்பவில்லை.
ஆனால் அந்த இளைஞருக்கு தொல்லைக்கொடுக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
அண்ணாமலை
அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது - அண்ணாமலை குற்றச்சாட்டு
மேலும் பேசிய அவர், குடும்ப விவகாரத்தில் போலீசை வைத்து பிரஷர் கொடுக்கிறார்கள்.
பழைய புகார்களை கொண்டு வழக்குப்பதிவு செய்து வாரண்ட் போட்டு அந்த இளைஞரை கைது செய்வதோடு, அப்பெண்ணிற்கு மன அழுத்தம் கொடுக்கிறார்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு டிஜிபி'க்கு உத்தரவிடவேண்டும்.
அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது, முதல்வர் இதற்கு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பல நீதிமன்றங்களில் திமுக'வினை சார்ந்தோர் என்மீது வழக்கு போட்டுள்ளார்கள்.
இதுவரை ரூ.1,461 கோடி இழப்பீடு வழக்குகள் போடப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். திமுக பைல்ஸ்-2 ஜூலை மாதம் வெளியிடப்படும்.
புதிய அமைச்சர்கள் இம்முறை புகார்கள் வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.